ஸ்ரீலங்காவில் ஒரு போதும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது

ஸ்ரீலங்காவில் ஒரு போதும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது

பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்த சந்தர்ப்பத்திலும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமளிக்கும் நிலைமை தற்போது இல்லை.

பஸ் உரிமையாளர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன.

அவர்களது வருமானம் குறைவடைந்துள்ளமை பற்றி நாம் கலந்துரையாடியுள்ளோம். என தெரிவித்தார்.

இதேவேளை தனியார் பஸ் சேவைகள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.