இலங்கை எதிர் நியூஸிலாந்து: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 162 ஓட்டங்கள்

இலங்கை எதிர் நியூஸிலாந்து: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 162 ஓட்டங்கள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுபெற்றது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுக்களை இழந்து, 162 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணிசார்பில் டொம் லத்தம் 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், அஸித்த பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரண்டு வீக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பில் குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிம் சவுத்தி 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், மாட் ஹென்றி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.