இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் மேலும் 11 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் இதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுதியானவருடன் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் 669 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் சேவையாற்றி விடுமுறையில் தெஹியத்கைண்டி - தியவித்தாகம பகுதிக்கு வருகை தந்த இராணுவ சிப்பாய்க்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அவருடன் தொடர்பினை பேணியவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இராணுவ சிப்பாயின் மனைவி மற்றும் பிள்ளையும் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இராணுவ சிப்பாயின் மனைவியுடன் தொடர்பினை பேணிய 150 பேர் இன்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.