அகில இந்திய அளவில் ரஜினி, அக்சயகுமாரை முந்திய தளபதி விஜய்!

அகில இந்திய அளவில் ரஜினி, அக்சயகுமாரை முந்திய தளபதி விஜய்!

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலையே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் பொது மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான் என்பதும் அதிலும் தொலைக்காட்சி தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்படங்கள் மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு பொழுதுபோக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகில இந்திய அளவில் இந்த கொரோனா விடுமுறையில் யாருடைய திரைப்படங்கள் அதிக அளவு பார்க்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஒரு பட்டியலில் தளபதி விஜய்யின் படத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். அதாவது விஜய்யின் திரைப்படங்களை இந்த கொரோனா விடுமுறையில் 117.9 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை அடுத்து ராகவா லாரன்ஸ் திரைப்படங்களை 76.2 மில்லியன் பேர்களும், ரஜினிகாந்த் படங்களை 65.8 மில்லியன் பேர்களும், அக்சய்குமார் திரைப்படங்களை 58.8 மில்லியன் பேர்களும், பிரபாஸ் திரைப்படங்களை அடுத்து 56.9 மில்லியன் பேர்களும் பார்த்துள்ளனர்.

அகில இந்திய அளவில் தமிழ் நடிகர் விஜய்யின் திரைப்படங்களைத்தான் மிக அதிக அளவிலான பொதுமக்கள் பார்த்துள்ளனர் என்பதும் சூப்பர் ஸ்டார்களான ரஜினி, அக்சய்குமார் ஆகியோர்களை விஜய் பின்னுக்கு தள்ளி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினி, அக்சய்குமார், விஜய் ஆகியோர்களை ஒப்பிடும்போது மிகக்குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள ராகவா லாரன்ஸ் திரைப்படங்கள் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.