சின்னத்திரை படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: நூலிழையில் உயிர்தப்பிய நடிகர், நடிகைகள்!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்துவரும் காரணத்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போதைய ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மட்டும் ஒரு சில மாநிலங்கள் அனுமதி அளித்திருந்தன. அந்த வகையில் மும்பையில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு நடந்தபோது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அதில் நடிக்க வந்த நடிகர் நடிகைகள் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஜீடிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ’கும்கும் பாக்யா’. இந்த தொடரில் ஸ்ருதி ஜா, ஷபில் அலுவாலியா, முக்தா சப்பனேகர், கிருஷ்ணா கவுல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தொலைக்காட்சித் தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. மும்பையில் உள்ள ஒரு முன்னணி சினிமா ஸ்டூடியோவில் இந்த தொடரின் படப்பிடிப்பிற்காக செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தபோது திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து நிகழ்ந்தபோது இந்த தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகை நடிகைகள் படப்பிடிப்பில் இருந்தனர். இருப்பினும் அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் காயம் ஏற்படவில்லை என்பதும் அவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். முன்னணி ஹிந்தி தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பில் தீவிபத்து நடந்ததால் சின்னத்திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது