தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 2.30க்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று சபையில், அறிவித்தார்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை, ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.