துணிவு கொண்டாட்டம்: பாரவூர்தி மீது நடனமாடிய இளைஞர் தவறி வீழ்ந்து பலி!

துணிவு கொண்டாட்டம்: பாரவூர்தி மீது நடனமாடிய இளைஞர் தவறி வீழ்ந்து பலி!

துணிவு திரைப்படம் வெளியானதை கொண்டாடிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார் கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய் துள்ளார்.

துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் அதனை கொண்டாடும் விதமாக வீதியில் சென்ற பாரவூர்தி மீது ஏறி நின்று நடனமாடிய ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக தவறி வீதியில் வீழ்ந்துள்ளார்.

இதனால் முதுகு பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவரை் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 19 வயதான இளைஞரொருவரென தெரியவந்துள்ள அதேவேளை, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.