இன்றைய ராசி பலன் (1 ஜனவரி 2023)

இன்றைய ராசி பலன் (1 ஜனவரி 2023)

இன்றைய ராசிபலன், கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

​மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் நாள் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் இன்று மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. இன்று திருமணமானவர்களின் வாழ்க்கையில் காதல் நிரம்பி வழியும். காதலிப்பவர்கள் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள்.

குழந்தைகள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வார்கள். நீங்கள் செய்த வேலைக்கு ஏற்ற பலன் இன்று கிடைக்கும். சவால்களை எதிர்த்துப் போராடுவதில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் இயல்பாக இருக்கும். எனவே, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவைத்து நல்லது. இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 93% இருக்கும்.

​ரிஷபம்

 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் நாள் சற்று ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருக்கும். லாபத்தைப் பெற, வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியையும், லாபத்தையும் கொடுக்கும். பயணம் செய்வது தவிர்க்கவும். இதனால் சில நஷ்டம் ஏற்படலாம். வேலைப்பளு காரணமாக மன உளைச்சல் ஏற்படும். நீங்கள் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள்.

 

திருமண வாழ்க்கையில் பதற்றம் சற்று காணப்படும். காதலிப்பவர்கள் இருப்பவர்கள் இனிமையான தருணங்களை சந்திப்பார்கள். மேலும், ஆண்டின் முதல் நாளில் தங்கள் துணையுடன் பேசுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 95% இருக்கும்.

​மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்கள் இன்று மனதளவில் மிகவும் வலுவாக காணப்படுவார்கள். இதனால், உங்களின் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஏதாவது வேலை தடைபட்டால், அதில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்வார்கள். திருமணம் ஆனவர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுவதால், இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் குறுக்குவழியை பின்பற்ற வேண்டாம். ஏனென்றால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 87% இருக்கும்.

​கடகம்

 

புத்தாண்டின் முதல் நாளில் கடக ராசிக்காரர்களின் மனதில் மகிழ்ச்சியும், வீட்டில் பொலிவும் இருக்கும். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமை காணப்படும். பெரியவர்களுடன் சேர்ந்து புதிய வேலைகளை துவங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள்.

 

இன்று பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களை அதிகமாக நம்ப வேண்டாம். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆனால், திருமணமானவர்களின் வாழ்க்கை மன அழுத்தமாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 77% இருக்கும்.

​சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் நாள் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த திட்டங்கள் இன்று சிறப்பாக நடைபெறும். வேலையில் வெற்றி கிடைத்து மனம் மகிழ்ச்சி அடைவதோடு வருமானமும் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஏனென்றால், உடல்நிலை நீதியான பிரச்சனை உங்களை அமைதியற்றதாக உணர வைக்கலாம். திருமண வாழ்வில் மனைவிக்கிடையே மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் இருக்கும். உங்கள் துணையிடம் அதிக அன்பை வெளிப்படுத்துவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 69% இருக்கும்.

​கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். இவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும், மன நிம்மதியாக காணப்ப்சும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருண உண்டாகும். உங்கள் கூட்டாளியின் முழு ஆதரவும் இன்று உங்களுக்கு கிடைக்கும்.

2023-யில் இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..!

திருமணம் ஆனவர்கள், பிள்ளைகளின் முன்னேற்றம் மற்றும் வேலை சம்பந்தமாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நிர்வாகத்தினர் உங்கள் வேலையை பாராட்டுவார்கள், இதனால் உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 91% இருக்கும்.

​துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் இன்று நல்ல தருணங்களை அனுபவிப்பார்கள். காதல் உறவில் அன்பும் காதலும் அதிகரிக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தவும்.

இன்று குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். வேலை சம்பந்தமாக சில சவால்கள் இருந்தாலும் அவற்றை முழு மனதுடன் எதிர்கொள்வீர்கள். வருடத்தின் முதல் நாளில் சில மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்ல விரும்புவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 68% இருக்கும்.

​விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் வருடத்தின் முதல் நாளில் பலமான நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும், உற்சாகமான சூழல் நிலவும். இன்றைய நாள் வேலை சம்பந்தமாக மிகவும் நல்ல நாளாக இருக்கும்.

 

கடின உழைப்பால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தின் மீதும் முழு கவனம் செலுத்துவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆனால், திருமணமானவர்களின் திருமண வாழ்க்கையில் சில பதட்டங்கள் காணப்படும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 93% இருக்கும்.

​தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வருடத்தின் முதல் நாளில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் காரணமாக வேலை சம்பந்தமாக நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமை நிரூபிக்கப்படும். உங்களுக்கு விருப்பமான வேலையை முழு மனதுடன் செய்ய நினைப்பீர்கள், அதில் வெற்றியும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பத்தில் இளையவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள், குடும்பத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் இருக்கும். காதல் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் காதலியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 88% இருக்கும்.

​மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சிறப்பு அன்பை உணருவார்கள். உங்கள் வார்த்தைகளால் மக்களின் மனதை வெல்வீர்கள். காதல் வாழ்க்கை குறித்து இன்று சில இனிமையான செய்தியை பெறுவீர்கள்.

 

திருமணமானவர்கள் எங்காவது சாப்பிட வெளியே செல்லலாம். முன்பு செய்த கடின உழைப்பின் பலன் இன்று உங்கள் முன் வந்து சில நல்ல பலன்களை கொடுக்கும். இதன் காரணமாக புத்தாண்டின் முதல் நாள் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 81% இருக்கும்.

​கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் நாள் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டம் தீட்டலாம். குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும்.

2023-ல் திருமணம் செய்யப்போகும் அதிஷ்ட ராசிகள்!

ஆனால், கவலைப்படத் தேவையில்லை. வேலை தொடர்பாக நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் வெளியே செல்லலாம். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 83% இருக்கும்.

​மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதோடு, சற்று பொறுமையாக இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், உங்கள் மனைவி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிப்பார்.

 

இன்று பணியிடத்தில் கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தின் சூழ்நிலை அன்பு நிறைந்ததாக இருக்கும், மேலும் வீட்டின் பொறுப்புகளை நன்கு புரிந்துகொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 73% இருக்கும்.