அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
கந்தகாடு புனர்வாழ்வு முகாமுக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இணங்காணப்படும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, கந்தகாடு முகாமிலுள்ள அறுவர் அதனில் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி தற்போதவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2697 ஆக உள்ளதெனவும், அவர்களில் 2012 பேர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், 674 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் தெரிவித்தார்.