மிருகா படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

மிருகா படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை ராய் இலட்சுமி ஆகியோரின் நடிப்பில் இயக்கப்படுகின்ற மிருகா படத்தின் முதல் பாடல், இன்று (சனிக்கிழமை) சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு விடு க்கப்பட்டுள்ளது.

குறித்த படத்தின் டீசர், கடந்த ஜனவரி மாதம் வெளியாகியமையை தொடர்ந்து மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை இப்படம் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை சமூகவலைத்தளங்களில் நடிகர் தனுஷ் இன்று (சனிக்கிழமை) வெளியிடவுள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜே. பார்த்திபன் இயக்கத்தில் மிருகா படம் இயற்றப்படுகிறது. குறித்த படத்திலுள்ள  பாடலுக்கு அருள்தேவ் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மற்றும் ராய் இலட்சுமி ஆகிய இருவரும் இதற்கு முன்னர் சவுகார்பேட்டை படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.