இலங்கைக்கு 1000 மெட்ரிக் டன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு

இலங்கைக்கு 1000 மெட்ரிக் டன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு

இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிசித்தொகை கடந்த 4 ஆம் திகதி அங்கிருந்து கப்பலேற்றப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அவை இலங்கைவந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.