கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

பெற்றோலிய சேமிப்பு முனையம், புகையிரதங்கள் மற்றும் ட்ரக்டர்கள் மூலம் இன்று (19) முதல் கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) வரை இலங்கைக்கு வந்த 02 டீசல் கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மற்றுமொரு டீசல் கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன..

மேலும் நேற்று, நாட்டிற்கு வந்த பெற்றோல் கப்பல் ஒன்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இறக்கும் பணிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக எரிபொருள் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, சிபெட் கோ பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றுமாறு அமைச்சகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.