யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் தரமற்ற இறைச்சி கொத்தினை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் (15) மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த உணவகத்தில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக உரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் உணவகத்தில் இருந்தவாறு ஊடகவியலாளர் தொடர்பு கொண்ட நிலையில் அன்றையதினம் குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

இருப்பினும், அந்த ஊடகவியலாளர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Fur In Kottu Rotti At Jaffna Hotelஅதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை ஊடகவியலாளர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு வியாழக்கிழமை (16) குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.

யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Fur In Kottu Rotti At Jaffna Hotelஅத்துடன், தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை மற்றும் இறைச்சினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெரிய வந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்றைய தினம்(17) நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.