முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவை - காவேரி மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவை - காவேரி மருத்துவமனை அறிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நேற்று பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சைக்காக அவர் நேற்று மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா பாதிப்பு  காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து கண்காணித்து, பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்தார். திமுக எம்.பி.கனிமொழி நேரில் சந்தித்தார். இந்நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

காவேரி மருத்துவமனைஅறிக்கை

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு மேலும் சில நாள்கள் ஓய்வு தேவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.