மினுவாங்கொடையில் பரஸ்பர தூப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
மினுவாங்கொடை பகுதியில் பொலிஸாருக்கும் சூத்திரதாரி ஒருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் பல குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த அங்குலான 'கொனாகோவில் ராஜா' என்ற சந்தேக நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ , சொய்சாபுர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, கிரிக்கெட் வீரர் ஒருவரின் தந்தை ஒருவர் உட்பட பலரை கொலை செய்த சம்பவங்களின் சந்தேக நபராவார். அவரின் பெயர் அங்குலான 'கொனாகோவில் ராஜா' என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.