கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பேக்கரியின் ஊழியர் ஒருவர், பேக்கரியின் முன்னாள் ஊழியர் ஒருவரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கொஸ்லந்த பிரதேசத்தை சேர்ந்த 37 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.