பல்லேபெத்த பிரதேசத்தில் தம்பதியினர் வெட்டிக் கொலை
கொடகவெல கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வயோதிப தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 75 மற்றும் 82 வயதுடைய கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேகநபர்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் சந்தேக நபர் வைத்தியசாலை வளாகத்தினுள் இருப்பதாகவும் ஹொரண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹொரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹிக்கடுவ வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.