4 வீரர்கள் அரை சதம் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு

4 வீரர்கள் அரை சதம் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், பீட்டர்சன், பவுமா மற்றும் கேசவ் மகாராஜா ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எர்வி களமிறங்கினர். எர்வி 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய பீட்டர்சன் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். எல்கர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய பவுமா சிறப்பாக விளையாடினார். பீட்டர்சன் 64 ரன்களிலும் பவுமா 67 ரன்களிலும் வெளியேறினர்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கேசவ் மகாராஜா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 84 ரன்னில் அவுட்டானார். 

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், காலித் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் பொறுப்புடன் ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 33 ரன் எடுத்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 3 விக்கெட்டும், ஆலிவர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.