கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தொடர்பிற்கு அப்பால் ஒரு கொரோனா நோயாளர்! அடுத்த 4 நாட்கள் முக்கியம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தொடர்பிற்கு அப்பால் ஒரு கொரோனா நோயாளர்! அடுத்த 4 நாட்கள் முக்கியம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் கொரோனா தொற்றின் தொடர்பாளிகளை கண்டறிந்துவிட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் தொடர்புக்கு அப்பால் ஒருவர் மாத்திரமே கொரோனா தொற்றாளியாக கண்டறியப்பட்டுள்ளார்.

இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் அனைவருக்கும் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிலையத்தின் ஆலோசகர்கள் அனைவருக்கும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படடுள்ள நிலையில் அதற்கான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

அத்துடன் அவர்களின் குடும்பத்தினருக்கும் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 116 பேரை பார்க்க சென்றவர்கள் 378 பேரின் பரிசோதனை அறிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதில் எவராவது தொற்றாளியாக காணப்பட்டால், அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் கண்டறியப்படுவார்கள்.

எனவே அடுத்து வரும் நான்கு நாட்கள் முக்கிய நாட்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.