43 மணிநேரம் தாயின் சடலத்துடன் இருந்த மகள்கள்! தந்தையின் கொடூரம் அம்பலம்

43 மணிநேரம் தாயின் சடலத்துடன் இருந்த மகள்கள்! தந்தையின் கொடூரம் அம்பலம்

தமிழகத்தில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இறந்த தாயின் சடலத்துடன் 43 மணிநேரம் குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில் வசித்து வந்தவர் ஜோஸ்கான்பியர் (47). இவரது மனைவி வனஜா(32) தம்பதிகள். இவர்களுக்கு 13 வயதில் மஞ்சு மற்றும் 12 வயதில் அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மஞ்சு 8ம் வகுப்பும், அக்ஷரா 7ம் வகுப்பும் அருகே உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். 

கொலை செய்யப்படட தாய்

இருதினங்களுக்கு முன்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த கணவர் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் தந்தை தாய் வனஜாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

பின்பு சடலத்தினை துணியில் சுற்றி கட்டிலுக்கு அடியில் மறைத்து போட்டுள்ளார். பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தைகள் தாய் எங்கே என்று கேட்டதற்கு உள்ளே இருப்பதாக தந்தை கூறியுள்ளார்.

 

உள்ளே சென்று அவதானித்த குழந்தைகள் கட்டிலுக்கு அடியில் துணியில் சுற்றப்பட்ட தாய் இறந்து கிடந்ததை அறிந்து, அலறியடித்து வெளியே ஓடி வர முயற்சித்துள்ளனர். ஆனால் தந்தை ஜோஸ்கான்பியர் இருவரையும் வீட்டிற்கு இழுத்துச் சென்று கைகளை கட்டி, வாயில் துணியை வைத்து உள்ளே விட்டு கதவை அடைத்துள்ளார்.

48 மணிநேரம் சடலத்துடன் குழந்தை

அக்கம் பக்கத்தினர் விசாரித்து கதவை திறந்த போது, அலறியடித்து மகள் வெளியே வந்து, தந்தையை தாயாரை கொலை செய்துவிட்டதாகவும், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதாகவும் கூறி அழுதுள்ளனர்.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபொலிசார், கட்டிலுக்கு அடியில் அழுகிய நிலையில் இருந்த வனஜாவின் உடலை மீட்டனர்.

 

பின்பு கணவரை தேடியபோது அவர் மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவாறு இருந்துள்ளார். இருவரின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்

43 மணிநேரம் தாயின் சடலத்துடன் நடுங்கிய படி இருந்த குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு, மூத்த மகள் மஞ்சுவின் கழுத்தில் கத்தியால் கீறியிருந்ததவும், அதிலிருந்து ரத்தம் கொட்டியிருந்ததையும் அவதானித்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது.