
உக்ரைன் பெண்படையினர் அதிரடி தாக்குதல் - தகர்த்தெறியப்பட்ட ரஷ்ய தாங்கிகள்(வீடியோ)
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர் உக்ரைன் பெண்கள் படையணி.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது.தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன.எனினும் உக்ரைன் படையினரின் கடும் எதிர்த்தாக்குதலால் இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய தாங்கிகளை உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படை ஓடஓட தகர்த்தெறிந்து அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்த வீடியோவைஉக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Ювелірна робота нашої артилерії по ворожим танкам в районі н.п. Бородянка. pic.twitter.com/LwK01cwpWy
— Defence of Ukraine (@DefenceU) March 10, 2022
பீரங்கிகள் மூலம் உக்ரைனின் தாடிவைத்த பெண்கள், எதிரி நாட்டின் தாங்கிகளை நகைவேலைப்பாடு செய்வதுபோல் சுட்டுவீழ்த்தியுள்ளனர் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை மற்றொரு பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய தாங்கியையும் உக்ரைன் படையினர் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் அபாரமாக தகர்த்தெறிந்தள்ளனர்.
🔥👏🏻 Військово-морські сили ЗСУ мають чим порадувати цього ранку #stoprussia pic.twitter.com/KadNG0XuPM
— Ukrinform (@UKRINFORM) March 10, 2022