பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்.... அட இவ்வளவா?

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்.... அட இவ்வளவா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பங்கேற்கும் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற விபரம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் தமிழில் முதல் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக 48 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் பிக்பாஸ் தமிழ் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களாக நிரூப், வனிதா விஜயக்குமார், பாலாஜி முருகதாஸ், ஜுலி, சுருதி, சுஜா வருணி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன், அபிராமி ஆகிய 14 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் சேர்த்து ஓவியா, இன்னும் சிலரும் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் வைல்ட்கார்டு என்ட்ரியை போல் பிறகு வரலாம் என கூறப்படுகிறது.

லேட்டஸ்ட் தகவலின் படி பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் விபரம் வெளியிடப்பட்டுள்ளதாம்.

இதில் சினேகன் மற்றும் வனிதா விஜயக்குமாருக்கு ஒரு நாளைக்கு ரூ.45,000 முதல் ரூ.50000 வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தாடி பாலாஜிக்கு ஒரு நாளைக்கு ரூ.40,000மும், ஜுலிக்கு ரூ.30,000 மும் பேசப்பட்டுள்ளதாம்.

மற்ற போட்டியாளர்கள் அவர்கள் பங்கேற்ற சீசனில் என்ன சம்பளம் வாங்கினார்களோ அதே சம்பளமே வழங்க, தற்போதும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். வழக்கமான பிக்பாஸ் ஷோவில் இருப்பதை போன்று வெறும் சண்டை, சர்ச்சைகள் மட்டும் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் இருக்காதாம்.

விளையாட்டுக்கள் உள்ளிட்ட அனைத்தும் புதிதாக, ரசிகர்களை கவரும் வகையில் இருக்க பிளான் செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.