கொரோனா தொற்று உறுதியான 827 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான 827 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 827 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 599,363 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 15,279 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 192 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,529 ஆக அதிகரித்துள்ளது.