இலங்கை அணிக்கு பதில் பயிற்சியாளர் நியமனம்

இலங்கை அணிக்கு பதில் பயிற்சியாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் வெற்றிடமாக நிலவிய அவரது பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எனவே குறித்த சுற்றுப்பயணத்தை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.