தெஹிவளையில் சுழியோடியைத் தாக்கிய முதலையைத் தேடும் பணிகள் தீவிரம்
தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடலில் சுழியோடியைத் தாக்கிய முதலையைப் பிடிக்கும் நோக்கில், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றிரவு முதல் முதலை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முதலை வெள்ளவத்தை கடல் பகுதியில் உள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தற்போது அங்குத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் குறித்த முதலை தாக்கி ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இரத்மலானை - வீரசிங்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த 58 வயதான சுழியோடி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.