நாட்டில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய நாளில் 130,644 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பைஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 40 இலட்சத்து 6 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 922 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும் 1,368 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 596 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 1,673 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.