பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடமானது - வர்த்தமானி வெளியீடு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்குட்பட்ட பதுளை மாநகர சபையின் நகர முதல்வர் பதவியில் இருந்து பிரியந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸமில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர், சேவையில் இருந்து விலகியவராக கருதப்படுவார் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படாமை காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்களின் விசேட சட்ட முறைமைகளுக்கு அமைய அவரை அந்த பதவியில் இருந்து நீக்கியதாகதாக ஊவா மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, பதுளை மாநகர முதல்வர் பதவிக்கு வெற்றிடம் காணப்படுவதுடன், பதில் நகர முதல்வர் பொறுப்பு, பிரதி நகர முதல்வர் நலிந்த ரங்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.