கல்கமுவ பகுதியில் சிற்றுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்து: இருவர் பலி

கல்கமுவ பகுதியில் சிற்றுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்து: இருவர் பலி

கல்கமுவ - மாகல் கடவல பகுதியில் சிறிய ரக சிற்றுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.