ஆற்றில் விழுந்த நபரை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

ஆற்றில் விழுந்த நபரை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

இன்று (25) காலை பொல்கொட ஆற்றில் விழுந்த நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பிலியந்தலை - மொரட்டுவ வீதியில் கொஸ்பெலன பாலத்தில் பொல்கொட ஆற்றில் தவறி விழுந்து நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான வசந்த டி சில்வா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

ஆற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படும் குறித்த நபர் நான்கு வருடங்களாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினத்திலும் பாலத்தின் அருகில் குறித்த நபர் நடந்து செல்வதை அவதானித்ததாக பாலத்தின் அருகில் உள்ள வியாபாரி ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.