இன்று மின் விநியோகத்தில் தடை ஏற்படாது

இன்று மின் விநியோகத்தில் தடை ஏற்படாது

லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்திருந்த இரண்டாவது மின் பிறப்பாக்கியின் Generator திருத்த வேலைகள் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இன்று (23) மின் விநியோகத்தில் தடை ஏற்படாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்க்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், ஏதாவதொரு காரணத்தினால் இன்றும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அது தொடர்பாக பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பாகங்களில் நேற்றிரவும் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.