கோவிலின் நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்லக் கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!!

கோவிலின் நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்லக் கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!!

கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மணி, மேள தாளம் மற்றும் நாதஸ்வரம் போன்ற சத்தங்களாலும் பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க உண்மை. இப்படி பல அற்புதங்கள் நிறைந்த கோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

கோவிலுக்குள் செல்லும் அனைவரும் கால்களை நன்கு கழுவி விட்டு செல்வது வழக்கம். ஆனால், அப்படி செய்யும் அவர்களுக்கு கோவிலின் வாசற்படியை மிதித்து செல்ல வேண்டுமா அல்லது தாண்டி செல்லவேண்டுமா என்று யோசிப்பது வழக்கம். அப்படி யோசிக்கவே தேவையில்லை. ஏனென்றால், கோவியிலுக்குள் செல்லும் அனைவரும் வாசற்படியை தாண்டி தான் செல்ல வேண்டும்.

அப்படி தாண்டி செல்வதற்கு முன்பு ஒவ்வொருவரும், குனிந்து நமது வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவ மத்தியின் ஆக்ஞா சக்கரம் உள்ள இடத்தில் அழுத்த வேண்டும். அப்படி செய்யும் போது நம் உடலானது நேர்மறையான ஆற்றல்களை கிரகிக்கும். இதையடுத்து, நாம், கோவிலுக்குள் சென்றதும் நம் பாதம் வழியாக கோவிலில் உள்ள நேர்மறை ஆற்றல்களானது நம் உடலுக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். இதன் காரணமாக நாம் அனைவரும் கோவிலுக்குள் செல்லும் போது கால்களை நன்கு கழுவிவிட்டும், கோவில் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டை தாண்டியும் செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.