ஆந்திராவில் பழமையான கட்டிடம் இடிந்து 6 பேர் பலி

ஆந்திராவில் பழமையான கட்டிடம் இடிந்து 6 பேர் பலி

ஆந்திராவில் பெய்த தொடர் கனமழை காரணமாக பழமையான கட்டிடம் இடிந்து 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஆந்திராவில் பழமையான கட்டிடம் இடிந்து 6 பேர் பலி

இடிந்து விழுந்த பழமையான கட்டிடம்

திருமலை:

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கதிரி பஜார் வீதியில் பழமையான கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கு நேற்று 6 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில் அனந்தபூரில் பெய்த தொடர் கனமழையால், அந்த கட்டிடம் திடீரென சரிந்து, அருகிலிருந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் 9 பேர் இருந்தனர்.

 


இந்த பயங்கர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 9 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 9 பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் கதிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கி பலியான 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பயங்கர விபத்து குறித்து கதிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.