நீர்கொழும்பு வைத்தியசாலையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த கைதியின் பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியானது
நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறைக் கைதிக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பி.சி.ஆர் சோதனை முடிவுகளின்படி, இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டியதால், 36 வயதான கைதி ஒருவர் ஜூலை 12 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்றபட்டபோது, இவ்வாறு 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வைத்தியசாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.