நாட்டில் நேற்றைய தினம் 130,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள்!

நாட்டில் நேற்றைய தினம் 130,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள்!

நாட்டில் 138,004 பேருக்கு நேற்று(29) கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 88,083 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 882 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

3,248 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 37,612 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

4,527 பேருக்கு அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசியும் 3,599 பேருக்கு மொடெர்னா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி இருவருக்கும், இரண்டாம் தடுப்பூசி 51 பேருக்கும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.