
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம் ; 6 பேர் பலி
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகளின் கூற்றுப்படி, யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 441 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.