லைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக் - இன்ஸ்டாவில் வைரல்

லைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக் - இன்ஸ்டாவில் வைரல்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் உயிருடன் உள்ள பாம்பு போல கேக் ஒன்றை தயாரித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இந்த கேக்குகள் தத்ரூபமாக இருப்பதால் மக்களை கவர்ந்து வருகிறது. தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 

இந்தநிலையில் நடாலி சைட்செர்ப், பாம்பு வடிவில் கேக் ஒன்றை தயாரித்தார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை நடாலி ஒரு கத்தியை எடுத்து வெட்டுகிறார். அதன் பின் அது கேக் என்பதை உணர முடிகிறது.

 

 

பாம்பு வடிவில் கேக்