சவுதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்
சவுதி அரேபியாவின் தியாட் நகரில் உள்ள ஒரு வீட்டில் தனது எஜமானர்களால் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய எமது செய்திப் பிரிவிடம்இதனை தெரிவித்தார்.
அவிசாவளையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டப் பெண், குருநாகலில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றில் பணம் கொடுத்து, 2017ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர், நீண்டகாலமாக வீட்டு எஜமானர்களால் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது