ஒன்றரை கோடியை நெருங்கும் கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம்!
கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 14,754,334 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல், 12,657,989 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 14,280
சைனோபார்ம் முதலாவது டோஸ் - 5,937 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 45,396
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் - 7,161 ஃபைசர் இரண்டாவது டோஸ் - 628
மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் - 405
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.