புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொவிட் 19 தடுப்புக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் இந்த சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.