விருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா!

விருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா!

துபாயில் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என உறவினர்களுக்கு அறிவிக்கும் விழாவினை ஒரு தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் உண்மையான புலி கலந்துகொண்டு பலூனை தட்டிவிட்டு குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

இந்தியாவில் குழந்தைப் பிறப்பின்போது ஆணா? பெண்ணா? என்ற பாகுபாடு இன்றைக்கு வரைக்கும் நீடிக்கத்தான் செய்கிறது. ஆனால் சில வெளிநாடுகளில் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? எனத் தெரிந்து கொள்வதற்குப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் செய்தியை தங்களது உறவினர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு தம்பதியினர் விருந்து வைத்து கொண்டாடவும் செய்கின்றனர்.