உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொழும்பு மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொழும்பு மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இம்முறை கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்படி தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது அடையாள அட்டையை சமர்ப்பித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.