யாழில் 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்குள் அனுமதிக்கப்பட்ட மக்கள்
யாழ்ப்பாணம் - பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு மக்கள் செல்ல நேற்று (20.11.2024) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், (20) முதல் பலாலி, வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.