நேற்று 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நேற்று 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய நாளில், 69, 902 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 12,189 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 51, 717 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

4, 552 பேருக்கு அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

ஆயிரத்து 62 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 326 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அத்துடன், 56 பேருக்கு மொடெர்னா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.