யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை 3.30 மணியளவில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். இதனொரு கட்டமாகவே யாழ் மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தின் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆயரால் எடுத்துரைக்கப்பட்டது.