காதல் உறவு பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை…!

காதல் உறவு பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை…!

காதலில் விழுவது என்பது மனித இயல்பு, உணர்வு ரீதியான இயற்கை. ஆனால், நாம் சரியான நபருடன் காதல் உறவில் பயணிக்கிறோமா என்பது தான் கேள்வி. முதல் பார்வையில் பலருக்கும் ஈர்ப்பு தான் ஏற்படுகிறது.

அந்த ஈர்ப்பை காதல் என்று எண்ணி, உறவில் இனைந்து பிறகு ஒருவருக்கொருவர் சேர்ந்து உறவாடும் போது தான், ச்சே இவர் நமக்கு ஏற்ற ஆள் இல்லை என்பது போன்ற உணர்வு பிறக்கிறது. சிலர் இதை ஏற்று கொண்டு, சகித்துக் கொண்டு உறவை நகர்த்துகிறார்கள். கசப்பான உணர்வுடன் உறவை நகர்த்தி செல்வது பெரிய முட்டாள் தனம்.

எத்தனை நாட்கள் சகித்து சகித்து வாழ முடியும். நீங்கள் சகித்துக் கொள்ளும் ஒவ்வொரு நொடியும், பின்னாளில் உங்களுள் இருந்து வெடிக்கும் பெரிய எரிமலையாய் உருமாறும். எனவே, நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் காதல் வாழ்க்கை சரியானது தானா என முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்…

அச்சமற்ற சூழல்
எப்போது உங்கள் உறவில் அச்சமற்ற சூழல் எழுகிறதோ அதை வைத்து நீங்கள் சரியான உறவில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என அறியலாம். ஆனால், உங்கள் உறவில் அல்லது துணையின் மீது அச்சம் (உடனிருக்க) ஏற்பட ஆரம்பிப்பது, அந்த சூழலை தவிர்க்க முயல்வது போன்றவை நீங்கள் தவறான நபருடன் காதலில் இருக்கிறீர்கள் என்பதன் பொருள்.

உணர்வற்ற பிரிவு
காதல் உறவில் பிரிவு ஏற்படும் உங்கள் உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனில், உங்கள் துணையின் பிரிவு உங்களை மனதளவில் பாதிக்கவில்லை எனில், நீங்கள் தவறான நபருடன் காதல் என்ற பெயரில் வெறுமென இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

தனிமையாக உணர்தல்
உங்கள் துணை இருந்தும் கூட துன்பமாக இருக்கும் போதும், தோல்வியில் துவண்டு போகும் போதும் நீங்கள் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு எழுகிறது எனில், நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை முழுவதுமாக ஈர்க்கவில்லை என்று அர்த்தம்.

பிரிவை ஏற்கும் துணிவு
பிரிவு ஏற்பட்டாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறது எனில், நீங்கள் சரியான நபருடன் காதல் உறவில் இல்லை என்று தான் பொருள்.

மூர்க்கத்தனமாக கோபம்
காதல் உறவில் அடிக்கடி சண்டை வருவது இயல்பு தான். ஆனால், அவர் என்ன செய்தாலும் உங்களுக்கு மூர்க்கத்தனமாக கோபம் வருகிறது எனில், நீங்கள் பயணிக்கும் காதல் உறவு பயனற்றது என்று தான் பொருள்.

செயல்களை பகிர்ந்துக்கொள்ள மறுத்தல்
உங்கள் வாழ்வில் நடக்கும் அன்றாட செயல்களை கூட பகிர்ந்துக்கொள்ள நீங்கள் தயங்குவது. இவை எல்லாமே நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்று எடுத்துரைக்கும் அறிகுறிகள் ஆகும்.