கொழும்பு - ஹட்டன் வீதியில் பேருந்து விபத்து! மயிரிழையில் தப்பிய பயணிகள்
கொழும்பு - ஹட்டன் வீதியின் ரெசல்ல சந்தியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெம்பஸ்டோவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்து இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளனது.
ஹட்டன் பிரதான வீதிக்குள் நுளைய முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடைசாந்துள்ளது.
விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.