பால்டிக் கடலில் எம்எஸ் எஸ்டோனியா கப்பல் கவிழ்ந்து 852 பயணிகள் பலி (செப். 28, 1994)

பால்டிக் கடலில் எம்எஸ் எஸ்டோனியா கப்பல் கவிழ்ந்து 852 பயணிகள் பலி (செப். 28, 1994)

பால்டிக் கடலில் 1994-ம் ஆண்டு எம்எஸ் எஸ்டோனியா என்ற மிகப்பெரிய கப்பல் மூழ்கியது 20-ம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கடல் பேரழிவில் ஒன்றாக கருதப்படுகிறது.

பால்டிக் கடலில் 1994-ம் ஆண்டு எம்எஸ் எஸ்டோனியா என்ற மிகப்பெரிய கப்பல் மூழ்கியது 20-ம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கடல் பேரழிவில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
ஜெர்மன் நாட்டின் பேபன்பர்க் கப்பல் கட்டும் தளத்தில், 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1980ம் ஆண்டு முதல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

1994ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, எஸ்டோனியாவில் இருந்து ஸ்டாக்ஹோம் நகருக்கு இந்த கப்பல் புறப்பட்டுச் சென்றது. அதில் 803 பயணிகள், 186 ஊழியர்கள் பயணம் செய்தனர். மறுநாள் காலை 9.30 மணிக்கு ஸ்டாக்ஹோம் நகரை அடைய வேண்டும். ஆனால், 28ம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் பால்டிக் கடலைக் கடந்தபோது, மோசமான வானிலை காரணமாக கப்பல் மூழ்கியது.

இதில் 138 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 852 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களில் ஸ்வீடன் (501 பேர்), எஸ்டோனியா (285 பேர்) நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.