திடீரென்று பாம்பாக மாறிய இளைஞன்!! சற்றுமுன் மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் ( வீடியோ இணைப்பு)
தெருவில் ஒரு இளைஞன் நாகபாம்பு போன்று நடந்துகொண்ட சம்பவம் சற்று முன்னர் மட்டக்களப்பில் நடந்துள்ளது.
மட்டக்களப்பு நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்திற்கு அருகில் ஒரு இளைஞன் பாம்பு போன்று படமெடுத்து, ஊர்ந்து செயற்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஓட்டோ சாரதியான இவர், ஓட்டோவைச் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று இப்படியாக நடந்துகொண்டாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஓட்டோவை விட்டுவிட்டு வெளியே குதித்து பாம்புபோன்று செயற்படத்தொடங்கியதாகவும், சுமார் ஒரு மணி நேரம் வரை அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.
அந்த இளைஞனுக்கு 'தெய்வம் வந்துவிட்டது' என்று சிலரும், 'யாரே மாந்திரீகம் செய்துவிட்டார்கள்' என்று ஒரு சிலரும், 'பேய் பிடித்துவிட்டதன் விளைவு' என்று வேறுசிலரும் பேசிக்கொண்டதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்