நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை

நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 

நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

நீட் தேர்வு


நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த மாணவி கனிமொழி பிளஸ் 2 வில் 600க்கு 562.28 மதிப்பெண் எடுத்திருந்தார்.

10 வகுப்பில் 500க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து தனியார் பள்ளியில் கனிமொழி முதலிடம் பிடித்திருந்தார்.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் இப்போது அரியலூர் மாணவி கனிமொழி  தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.