மலையகத்தில் தொடரும் குளவிக் கொட்டு: மேலும் ஏழு பேர் வைத்தியசாலையில்!

மலையகத்தில் தொடரும் குளவிக் கொட்டு: மேலும் ஏழு பேர் வைத்தியசாலையில்!

நாணுஓயா டெஸ்ட்போர்ட் தோட்டத்தில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகிய 07 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நாட்களில் மலையகத்தில் குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகி இருவர் பலியானதோடு 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.